Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லையில் 245 நிவாரண முகாம்கள் தயார் | மாவட்ட ஆட்சியர் தகவல்!

08:45 PM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்க நெல்லை மாவட்டத்தில் 245 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement

குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில் மாநகர பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழையானது பதிவாகியுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, ஆறுமுகநேரி, மற்றும் காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது.

இதனால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்க நெல்லை மாவட்டத்தில் 245 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது:

மாவட்டத்தை 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு வருவாய்,காவல்,மின்சாரம்,தீயணைப்புத் துறை ஒருங்கிணைந்து செயல்பட 1 கண்காணிப்பு அதிகாரி உட்பட 4 சிறப்பு அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். மாவட்டம் முழுதும் 20 முகாம்களில் 985 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 245முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் 37 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வெள்ள நீர் கால்வாயில் 300 கன அடி முதல் 3000 கன அடி வரை திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றைப் பொறுத்தவரை 85 ஆயிரம் முதல் 1 லட்சம் கன அடி வரை நீர் வரத்துச் செல்லும்.

தற்போது 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்புப் படை மூன்று குழுவும் மாநில பேரிடர் பாதுகாப்புப் படை மூன்று குழுவும் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
Next Article