For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானை வென்ற தென்னாப்பிரிக்க அணி.. 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்!

10:38 PM Oct 27, 2023 IST | Web Editor
பாகிஸ்தானை வென்ற தென்னாப்பிரிக்க அணி   10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்
Advertisement

உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 271 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. 

Advertisement

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.

அந்த வகையில் உலகக் கோப்பை 2023 தொடரின் 26வது போட்டி பாகிஸ்தான் - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே சென்னையில் சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த உலகக் கோப்பை தொடரின் கடைசி போட்டி இங்கு நடைபெறுவதால் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பியது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்ங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 270 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக செளத் ஷாகில் 52, பாபர் அசாம் 50 ஷதாப் கான் 43 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பரிக்கா பவுலர்களில் இடது கை ஸ்பின்னரான தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டை எடுத்தார்.

இதனைதொடர்ந்து பேட்டிங்கில் கலமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி. 30 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தது. பின்னர் 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 249 ரன்கள் சேர்த்தது. 44 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டினை இழந்து 256 ரன்கள் சேர்த்தது. 46 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் சேர்த்தது.

இறுதியாக கேசவ் மகாராஜ் 47.2வது ஓவரில் 4 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இதன்மூலம் 24 ஆண்டுகால வரலாற்றை தென் ஆப்பிரிக்க அணி மாற்றி அமைத்தது. அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 93 பந்துகளுக்கு 91 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர் தோல்விகளின் பிடியில் பாகிஸ்தான் சிக்கிக் கொண்டிருக்க, அதே சமயம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை மிகவும் கடினமாக்கி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஷாஹின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags :
Advertisement