மக்களவையில் இம்முறை 24 முஸ்லிம் எம்பிக்கள் மட்டுமே; கடந்த தேர்தலில் எத்தனை பேர் தெரியுமா?
10:47 AM Jun 06, 2024 IST | Web Editor
Advertisement
18வது மக்களவையில் முஸ்லிம் எம்.பிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
Advertisement
மக்களவை தேர்தல் 2024ல், அனைத்து கட்சிகளும் கடந்த முறை விட குறைவான முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளன. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று 26 முஸ்லிம் வேட்பாளர்கள் நாடாளுமன்றத்தை அடைந்த நிலையில், 2024ல் இந்த எண்ணிக்கை 24 ஆகக் குறைந்துள்ளது.
அண்மையில் நடந்துமுடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலில் மொத்தம் 78 முஸ்லிம் வேட்பாளா்கள் களம்கண்டனா். கடந்த 2019-இல் இந்த எண்ணிக்கை 115-ஆக இருந்தது. தற்போதைய தோ்தலில் அஸ்ஸாம் மாநிலம், துப்ரி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ரகிபுல் ஹுசைன், தன்னை எதிா்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட சுமாா் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினாா்.
மேற்கு வங்கத்தின் பஹராம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் முதல்முறையாக களமிறக்கப்பட்ட யூசுஃப் பதான், அத்தொகுதியில் தொடா்ந்து 6 முறை எம்.பி.யாக இருந்த காங்கிரஸின் அதீா் ரஞ்சன் செளதரியை தோற்கடித்தாா். ஹைதராபாதில் போட்டியிட்ட அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி, பாஜக வேட்பாளா் மாதவி லதா கோம்பெல்லாவை சுமாா் 3.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.
தற்போதைய தோ்தலில் வெற்றிபெற்ற 24 முஸ்லிம் வேட்பாளா்களில் 7 போ் காங்கிரஸைச் சோ்ந்தவா்கள். திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் 5, சமாஜவாதி தரப்பில் 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தரப்பில் 3 முஸ்லிம் வேட்பாளா்கள் வெற்றி கண்டுள்ளனா். பாஜக சாா்பில் கேரளத்தில் களமிறக்கப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளா் தோல்வி அடைந்தார்.