Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை | 24 மணி நேர விமான சேவை இன்று தொடக்கம் !

02:21 PM Dec 20, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை முதல் கட்டமாக இன்று இரவு 10:45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

Advertisement

மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையம் அறிவித்தது. இதன் முதல் கட்டமாக இன்று (டிச. 20) முதல் மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் என அறிவிப்பு வெளியானது.

ஏற்கெனவே சென்னையில் இருந்து 8.45 மணிக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து 9 மணிக்கு கடைசி விமானம் சென்றது. 24 மணி நேர சேவைக்கு பிறகு முதல் விமானமாக சென்னையிலிருந்து 9.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது. பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10.45-க்கு மேல் மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12.05 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.

இதற்கு முன்பு இரவு 9.05 மணிக்கு மேல் மதுரையில் இருந்து விமான சேவை இல்லை என்றும், 24 மணி நேர சேவையின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது எனவும் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags :
AirportChennaiflightMaduraiservice
Advertisement
Next Article