Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

23 தமிழக மீனவர்கள் கைது... தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

07:06 AM Nov 10, 2024 IST | Web Editor
Advertisement

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற கன்னியாகுமரி மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மூன்று விசைப்படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

அதிகாலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்களை கொதிப்படைய செய்துள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு அமைச்சகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். சில நேரங்களில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, ஆயுதங்களை கொண்டு தாக்குதல், வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபடுகின்றனர்.

Tags :
Arrestfisherssri lanka navyTN Govt
Advertisement
Next Article