For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை - பரபரப்பை கிளப்பிய ஜோதிர்மட சங்கராச்சாரியார்!

10:59 AM Jul 16, 2024 IST | Web Editor
கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை   பரபரப்பை கிளப்பிய ஜோதிர்மட சங்கராச்சாரியார்
Advertisement

கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை என ஜோதிர்மட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

உத்தரகாண்ட் ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாரான சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சென்றார். மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த ஜோதிர்மட சங்கராச்சாரியார் அவரிடம் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் மும்பை செய்தியாளர்களிடம் ஜோதிர்மட சங்கராச்சாரியார் தெரிவித்ததாவது..

“மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சராக  பதவியில் இருந்த உத்தவ் தாக்கரேவின் பதவி பறிக்கப்பட்டது மிகப் பெரும் நம்பிக்கைத் துரோகம். அவரை மீண்டும் முதலமைச்சராக அமர வைப்பதன் மூலமே அந்த வலியை போக்கவும் முடியும். நாம் இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள். பாவ, புண்ணியங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். நம்பிக்கை துரோகம் என்பது இந்து மதத்தில் மிகப் பெரிய பாவச் செயலாகும்.

டெல்லியில் கேதார்நாத் சிவன் கோயில் கட்டுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் கேதார்நாத் கோயில் கட்டவே கூடாது. கேதார்நாத் சிவன் கோயில் என்பது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. 12 ஜோதிர்லிங்கங்கள் எவை என்பது குறித்து சிவபுராணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் அவற்றில் ஒன்றான கேதார்நாத்தைப் போல இன்னொரு கோவில் கட்டுவது மிகப் பெரிய மோசடியாகும்.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சிவன் கோயிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயமாகி உள்ளன. மும்பையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத தொழிலதிபர் ஒருவர் தான் இந்த தங்க நகைகளைக் கொடுத்தார். நகைகளை மாயமானது தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை.

இது குறித்து ஏன் யாருமே பேசவில்லை? இதை திசை திருப்ப இப்போது கேதார்நாத் கோயிலை டெல்லியில் கட்டுகிறார்களா? 228 கிலோ தங்க நகை காணாமல் போனதற்கு யார் தான் பொறுப்பு? டெல்லியில் கேதார்நாத் கோயிலைக் கட்ட ஒரு போதும் அனுமதிக்க முடியாது” என ஜோதிர்மட சங்கராச்சாரியார் தெரிவித்தார்.

Tags :
Advertisement