Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் இன்று முதல் 21-வது சர்வதேச திரைப்பட விழா!

12:08 PM Dec 14, 2023 IST | Web Editor
Advertisement

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று(டிச.14) தொடங்குகிறது.

Advertisement

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் நடக்கும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : நாடாளுமன்றத்தில் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்!

இந்த விழாவில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். குறிப்பாக 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில், தேர்வாகும் சிறந்த திரைப்படங்களுக்கு, சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. 

இந்த விழாவில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை 1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய தமிழ்ப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

Tags :
ChennaicinemanewsfestivalInternational FilmKollywoodnewsttncinema
Advertisement
Next Article