தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவா்கள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் மக்கள் தம் சொந்த ஊா்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது வழக்கம்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”தீபாவளி பண்டிகையையொட்டி, அக். 16 முதல் 19 வரை சென்னையில் இருந்து 14,208 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 6,100 சிறப்பு பேருந்துகள் என 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக, 3 நாள்களுக்கு 10,529 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள் செயல்படும்”
என்று தெரிவித்தார்.