Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ரோகித், கோலிக்காக 2027 உலகக்கோப்பை காத்திருக்கும்” - கவுதம் கம்பீர்!

04:35 PM Jul 22, 2024 IST | Web Editor
Advertisement

“ரோஹித், கோலி உடல்தகுதி நன்றாக இருந்தால் 2027 உலகக்கோப்பை அவர்களுக்கு காத்திருக்கும்” என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார்.

Advertisement

 

டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட், 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் கோப்பைக்கனவை நிறைவேற்றிவிட்டு விடைபெற்றுக்கொண்டார். இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கவுதம் கம்பீர், ஜூலை 27 முதல் நடைபெறவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடர்களிலிருந்து இந்தியாவை வழிநடத்த உள்ளார்.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இத்தகைய சூழலில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தன்னுடைய முதல் செய்தியாளர் சந்திப்பை எதிர்கொண்ட கம்பீர், பல்வேறு காரசாரமான கேள்விக்கு பதிலளித்தார்.
பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கவுதம் கம்பீரிடம் விராட் கோலி உடனான உறவு குறித்து கேட்கப்பட்டது. ஐபிஎல் தொடர் முழுக்க இரண்டு வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல் இருந்துவந்த நிலையில், கவுதம் கம்பீர் அளித்திருக்கும் “எங்கள் உறவு உங்களின் TRP-க்கானது அல்ல” என்ற பதிலை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
விராட் கோலி குறித்து பேசிய கம்பீர், “எங்கள் இருவருக்குமான உறவு TRP-க்கானது அல்ல. விராட் கோலியுடன் நான் எப்படிப்பட்ட உறவைப் பகிர்ந்துகொள்கிறேன் என்றால், இது இரண்டு முதிர்ந்த நபர்களுக்கு இடையே இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்தந்த நேர களத்தில், ஒவ்வொரு வீரரும் தங்கள் சொந்த ஜெர்சிக்காக போராடி வெற்றிபெற்று டிரஸ்ஸிங் அறைக்கு திரும்புவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். நாங்களும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் எங்கள் அணிக்காக அதைத்தான் செய்தோம்.
ஆனால் இந்த நேரத்தில் நாங்கள் இருவரும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறோம், 140 கோடி இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், நாங்கள் ஒரே பக்கத்தில் இருக்கப் போகிறோம், மேலும் இந்தியாவைப் பெருமைப்படுத்த முயற்சிப்போம் என்று நான் நம்புகிறேன்” என பதிலளித்துள்ளார்.
மேலும் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டது மற்றும் விராட் கோலி, ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பேசிய கம்பீர், “ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒருவருக்கு பணிச்சுமை முக்கியமானது. ஆனால் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தற்போது இரண்டு வடிவங்களில் மட்டுமே விளையாடுவார்கள் என்பதால், அதிகமான ஆட்டங்களில் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள், ஒருவேளை அவர்களின் உடல்தகுதி நன்றாக இருந்தால் 2027 உலகக்கோப்பை அவர்களுக்கு காத்திருக்கும்” என கம்பீர் கூறியுள்ளார்.
Tags :
Cricketgautam gambhirRohit sharmaVirat kohliworld cup
Advertisement
Next Article