Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு" - திருமாவளவன்!

வருகிற 2026 சிறுத்தைகளின் ஆண்டு, தமிழகத்தின் தலையெழுத்தை சிறுத்தைகள் தீர்மானிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
06:58 AM Aug 10, 2025 IST | Web Editor
வருகிற 2026 சிறுத்தைகளின் ஆண்டு, தமிழகத்தின் தலையெழுத்தை சிறுத்தைகள் தீர்மானிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Advertisement

அரூர் பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது பேசியவர், "பெரும் மன அழுத்தம், வலிகளுக்கிடையில் 9-ம் தேதி திட்டமிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் என முகநூலில் பேசி உறுதிப்படுத்தினேன். என் சின்னம்மா கவலைக்கிடமாக உள்ள நிலையில், தம்பிகளை உடனிருக்க அறிவுறுத்திவிட்டு, வந்தேன்.

Advertisement

இந்த கூட்டம் தேர்தல் நிதியளிப்பு, அரசியல் அங்கிகாரம், எனது பிறந்தநாள், தீர்மான விளக்க பொதுக்கூட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் பேசும் நிலையில் இல்லை. மீண்டும் பெரம்பலூர் செல்ல வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் முதன் முறையாக தேர்தல் நிதியளிப்பு விழா நடைபெற்றுள்ளது.

இன்று அரூரில் தொடங்கி வைத்துள்ளீர்கள். இது தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெறும் என்று நம்புகிறேன். அ என்பது முதல் எழுத்து, சட்டமன்ற தொகுதிகளில் அரூர் முதல் இடம். தமிழ்நாட்டு அரசியலில் அனைத்து வலிகளையும் தாக்கு பிடித்து நின்றோம். இன்று 4 எம்எல்ஏ, 2 எம்பி வெற்றி பெற்று, அரசியல் அங்கீகாரம் பெற்றுள்ளோம். நமக்கு வெற்றி பெற வைத்த, தொகுதி மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கூட்டணி கட்சியின் தலைவர் தளபதிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரை நூற்றாண்டு காலத்தில், தலித் அமைப்புகள் எத்தனை இருந்தாலும், மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி விசிக தான். இது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு திருப்புமுனை. விசிடே என்பது இந்தியாவில் பெயர் பெற்றது. இந்த வெற்றியை விசிக தொண்டர்களின் காலடியில் சமர்ப்பிக்கிறேன். ஆண்டுதோறும் எனது பிறந்தநாளில் ஒரு கருப்பொருளை முன்னிருத்தி கொண்டாடி வருகிறோம்‌.

இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக மதச்சார்பின்மையை காப்போம் என்பதை வைத்து கொண்டாடுகிறோம். இது 2016-ம் ஆண்டு இதே கருப்பொருள் வைத்துள்ளோம். நாம் கொள்கை பிடிப்போடு, எதிரிகளை நடுநடுங்க வைத்துள்ளோம் என்பதை புரிந்து கொண்டேன். எங்கு பார்த்தாலும் மதச்சார்பின்மை காப்போம் என்ற புழுக்கம் ஒலிக்க வேண்டும். ஏன் நாம் மாதச்சார்பின்மை காப்போம் என்றால், இந்தியா முழுவதும் பேசவேண்டிய பொருள் ஒலிக்க வேண்டும். இந்தியாவையே மாதச்சார்பின்மை காப்போம்
என்று ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று இரண்டாக பிரிக்க வேண்டும்.

புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய ஆயுதம் தான் மதச்சார்பின்மை. இதற்கு எதிரானவர்கள் யார் என்றால், பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னனி மற்றும் அவர்களோடு கூட்டணி வைத்துள்ள அதிமுக போன்றவைகள். நாம் ஏன் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகளோடு கூட்டணி வைத்துள்ளோம் என்றால், மதச்சார்பினாமையை ஆதரிப்பவர்கள், அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்கும் என்பதால் கூட்டணி வைத்துள்ளோம்.

திமுக ஒரு சீட்டு தராங்க, பொது தொகுதி கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் என்பவர்களுக்காக நான் சொல்லவில்லை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தான் சொல்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெயரே மதச்சார்பற்ற கூட்டணி. இதை கலைஞர் பெயர் வைக்கும்போது, மாதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கான உன் கூட்டணி என்று பெயர் வைத்தார். இனி யாராவது கேட்டால், தூக்கி வீசுங்கள்.

அம்பேத்கர் பிறந்த நாளை பாஜக கொண்டாடுகிறது‌. ஆனால் அம்பேத்கரின் கொள்கை பாஜகவுக்கு உடன்பாடில்லை. புலுரிசம் மதச்சார்பின்மையை எடுக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் கோட்பாடு. இதை யாராவது பாஜகவினர் மறுக்க முடியுமா? அவர்களால் முடியாது. திமுக மதச்சார்பின்மையை ஆதரிக்கும். அதனால் திமுகவோடு கைக்கோர்கிறோம். பாஜகவுக்கு உடன்பாடில்லாத கருத்தை அதிமுக ஏற்கிளதா என்று கேள்வி எழுகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒப்பீடு செய்வதற்காக பேசினேன். நான் எம்ஜிஆர் பற்றி பேசுவதற்கு நான் என்ன அவ்வளவு பெரிய ஆளில்லை. ஜெயலலிதாவே சட்டமன்றத்திலே நான் பாப்பாத்தி என்று பேசினார். அதிகமுகவுக்கு தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பு மட்டும் தான் பேசுகிறார்கள். இதைத்தான் நான் ஒப்பீடு செய்து பேசினேன். கடந்த 70 ஆண்டுகளாக திமுக எதிர்ப்பு தான் இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா, மதிமுக, பாமக, விசிக கூட திமுகவை எதிர்த்து தான் பேசினோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட கலைஞருக்கு எதிராக வாக்களித்தார். அதை படமெடுத்து டிவியில் ஒளிபரப்பானது. ஆனாலும் ரஜினிகாந்த் மீது, கலைஞர் கோவப்படாமல், அவரோடு அமர்ந்து படம் பார்த்தார். அந்த சகிப்பு தன்மை தான் நமக்கு வேண்டும். சமூக ஊடகத்தில் எவனாவது கழித்துவிட்டு போனால் போகட்டும் கழுசடைகள். நான் மதச்சார்பின்மை காப்பதற்காக தான் காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

நாங்கள் சிறு ஆமா பாசத்திற்கு ஆசைப்பட்டு, அங்கு போலாமா, இங்கே போலாமா என்றில்லை. எங்களை புரிந்து கொள்ள உங்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும். எங்களை அம்பேத்கர் கொள்கை தான் ஆளும், ஆட்டிப்படைக்கும். வேறு சக்தியும் எங்களை ஆளமுடியாது. மத நம்பிக்கை உள்ளவர்களை மதிக்கிறோம்‌. அண்ணன் பன்னீர்செல்வம் தேர்தல் நேரத்தில் நடராஜர், காளி, மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று பூஜை செய்து திருநீறு பூசி விட்டு தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார்.

அனைவரது உணர்வுக்கும் மதிப்பளிக்கிறோம். திருப்பரங்குன்றத்தில் திருநீறு வைத்தார்கள். ஒரு மணி நேரம் இருந்தது. வியர்வையோடு அதை தொடைத்தேன்‌‌. பாஜகவினர் கோபித்து கொண்டனர். ஒரு மாதம் என்னை வறுத்தெடுத்துவிட்டனர். உங்களது சனாதனத்தை வேரறுப்பவன் திருமாவளவன் தான். மக்கள் விருப்பத்தை தான் நிறுவேற்றுகிறேன். மதம் மக்களுக்கானது. அரசுக்கானதல்ல. அரசு எந்த மதத்தை சார்ந்ததில்லை. இந்த கருத்தை அம்பேத்கர் வலியுறுத்திய போது, இந்த கருத்துக்கு துணை நின்றவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு, மற்றோருவர் அம்பேத்கரின் கொள்கை எதிரி காந்தியடிகள் தான்.

அதனால் தான் நாத் ராய் கோட்சே சுட்டுக் கொன்றார். கோட்சே பிராமண சமூகத்தை சார்ந்தவர். அம்பேத்கார் முன்னிறுத்திய மதச்சார்பின்மை ஆதரித்த காரணத்தால் காந்தியை சுட்டுக் கொன்றனர். அந்த வம்சத்தில் வந்தவர்தான் இந்திராகாந்தி. அவர்களின் பேரன் ராகுல் காந்தியோடு கைக்கோர்கிறோம். அதை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினோடு கைக்கோர்கிறோம். வருகிற 2026 சிறுத்தைகளின் ஆண்டு. தமிழகத்தின் தலையெழுத்தை சிறுத்தைகள் தீர்மானிக்கும் என்று தெரிவித்தார்.

Tags :
2026CMDMKElectionMKStalinTamilNaduthirumavalavanVCK
Advertisement
Next Article