2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு : டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றம்..!
ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியால் ஆண்டு தோறும் ’நோபல் பரிசு’ வழங்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக மனித குலத்துக்கு பலனளிக்கும் வகையில் செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அறிவியல் சமூகத்தால் இது உலகின் மிகவும் உயிரிய விருதாக கருதப்படுகிறது. மேலும் இந்த விருதானது இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி , பொருளாதாரம் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்ககவும் மரியா கொரினா மச்சாடோவு நடத்திய போராட்டங்களுக்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட 8 போர்களை தான் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என்று கோரி வந்தார். இந்த நிலையில் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால் டொனால்ட் டிரம்பிற்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.