Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'2025' ஆங்கில புத்தாண்டு - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

07:44 AM Jan 01, 2025 IST | Web Editor
Advertisement

2025 ஆங்கில புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

சாதனைகளை உச்சி முகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் கூறும் விதமாகத்தான் 2024 பாராளுமன்றத் தேர்தலில் "நாற்பதுக்கு நாற்பது" என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மகுடம் சூட்டினர் நம் மக்கள். விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து-இந்நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழ்நாடு மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024-ம் ஆண்டு-மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது.

சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும், வெற்றி பெறவுமான நம்பிக்கையினையும் உத்வேகத்தினையும் அளித்தது 2024-ம் ஆண்டு! புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம். மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய்:

மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை:

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில், முன்னெப்போதுமில்லாத வகையில் நம் நாடு, உலகின் முன்னோடியாகத் திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், முதன்மையான நாடாக இருக்கிறோம். உற்பத்தி, விவசாயம், வானியல் ஆராய்ச்சி, விளையாட்டு, தொழில் வளர்ச்சி என அனைத்துத்திலும் நம் நாடு பல மடங்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் தற்போதைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. தமிழகம் முழுவதுமே, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பெரிதும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

இந்தச் சூழல் மாறும். நம் தமிழக மக்கள், இந்த இருட்டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

தமிழ்​நாடு காங்​கிரஸ் தலைவர் செல்​வபெருந்​தகை:

2025 ஆங்கில புத்​தாண்​டில் இந்தியா​வில் ஜனநாயகம் தழைக்​க​வும், மக்களின் பிரச்​சினை​களுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்​காலம் அமைய அனைவருக்​கும் புத்​தாண்டு நல்வாழ்த்து​கள்.

விசிக தலைவர் திருமாவளவன்:

மலரும் புத்தாண்டான 2025ம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய் அமையட்டும். சனநாயகம் தழைக்கும் சாதனை ஆண்டாய் மலரட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:

புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சரத்குமார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் எம்பி, உள்ளிட்ட பலர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags :
2025EnglishEPSLEADERSMKStalinNew yearOccasionOPSPOLITICALvijayWishes
Advertisement
Next Article