Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2024 மக்களவைத் தேர்தல் - தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைப்பு!

02:47 PM Jan 20, 2024 IST | Web Editor
Advertisement

2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைத்துள்ளது மதிமுக.

Advertisement

மத்தியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டு ஆளும் கட்சியான திமுக,  தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க,  அறிக்கை தயாரிக்க,  கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து நேற்று (ஜன.19) அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைத்து அறிவித்துள்ளது மதிமுக.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கீழ்காணுமாறு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படுகிறது.

மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

Tags :
MDMKnews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduVaiko
Advertisement
Next Article