For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024 மக்களவைத் தேர்தல் - தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைப்பு!

02:47 PM Jan 20, 2024 IST | Web Editor
2024 மக்களவைத் தேர்தல்   தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைப்பு
Advertisement

2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைத்துள்ளது மதிமுக.

Advertisement

மத்தியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டு ஆளும் கட்சியான திமுக,  தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க,  அறிக்கை தயாரிக்க,  கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து நேற்று (ஜன.19) அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைத்து அறிவித்துள்ளது மதிமுக.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கீழ்காணுமாறு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படுகிறது.

  • ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -மதிமுக அவைத் தலைவர்
  • மு.செந்திலதிபன் -மதிமுக பொருளாளர்
  • ஆவடி இரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர்
  • வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர்

மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

  • தி.மு.ராசேந்திரன் -மதிமுக துணைப் பொதுச்செயலாளர்
  • ஆ.வந்தியத்தேவன் - மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர்
  • வழக்கறிஞர் ரா.செந்தில்செல்வன் - மதிமுக தணிக்கைக் குழு உறுப்பினர்
  • ப.த.ஆசைத்தம்பி - மதிமுக இளைஞரணி செயலாளர்
Tags :
Advertisement