For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று அறிவிப்பு?

07:26 AM Feb 22, 2024 IST | Web Editor
2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று அறிவிப்பு
Advertisement

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்ககூடிய 2024 ஐபிஎல் தொடரின் அட்டவணையானது இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உலகத்தின் நம்பர் 1 டி20 லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 17வது சீசன் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), மும்பை இந்தியன்ஸ் (MI), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் (SRH), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), குஜராத் டைட்டன்ஸ் (GT), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG), பஞ்சாப் கிங்ஸ் (PBKS), டெல்லி கேபிடல்ஸ் (DC) முதலிய 10 அணிகள் 17வது ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தும் கனவோடு தயாராகி வருகின்றனர்.

ஏற்கனவே சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 கோப்பைகளை கைவசம் வைத்திருக்கும் நிலையில், கொல்கத்தா அணி 2, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்று அடுத்த கோப்பைக்காக காத்திருக்கின்றனர். அதேவேளையில் மீதமிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் தங்களுடைய முதல் கோப்பைக்காக காத்திருக்கின்றனர்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்ககூடிய 2024 ஐபிஎல் தொடரின் அட்டவணையானது இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2024 ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் நடைபெறும் நிலையில், பிப்ரவரி மாதம் முடிவை எட்டியிருக்கும் நிலையிலும் ”நாடாளுமன்ற தேர்தல் மற்றும் டி20 உலகக்கோப்பையை” கருத்தில் கொண்டு தேதிகளை முடிவுசெய்யும் சிக்கலால் அட்டவணை தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை பார்த்த பிறகே ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் அறிவிக்கப்படும் என்று ஐபிஎல் சேர்மேன் தெரிவித்தார். அப்படியில்லையெனில் பகுதி பகுதியாக அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இன்று ஐபில் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்படவிருப்பதாகவும், ஜியோ சினிமாவில் மாலை 5 மணிக்கு நேரலை செய்யப்படவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை ஜுன் மாதம் 1ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், மே மாதம் இறுதிக்குள் ஐபிஎல் தொடரை முடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement