For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூசிலாந்தில் பிறந்தது 2024 - புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய மக்கள்! 

04:54 PM Dec 31, 2023 IST | Web Editor
நியூசிலாந்தில் பிறந்தது 2024   புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய மக்கள்  
Advertisement

நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், புத்தாண்டை கோலாகலமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, அந்நாட்டில் உள்ள ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட இடங்களில் கண்களைக் கவரும் வகையில், பட்டாசுகளை வெடித்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

உலகின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது நியூசிலாந்து நாடு. உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக நியூசிலாந்து உள்ளது.

இதையும் படியுங்கள் : மால டம் டம்… மஞ்சர டம் டம்… – 2023-ல் திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள்..!

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக கொண்டாடினர். கண்களைக் கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ‘Happy New Year' என சொல்லி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement