ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது ‘2018’ - இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்..!
ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் மலையாள திரைப்படமான ‘2018’ இடம்பெறாததால், இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஜூடு அந்தோணி ஜோசப் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸில் சுமார் ரூ.200 கோடி வசூலையும் குவித்து பிற மொழி ரசிகர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.
இதனையடுத்து, ஆஸ்கர் விருதுக்கு ‘2018’ அனுப்பப்படுவதாக இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுகளின் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பிரிவின் இறுதி பட்டியலில் ‘2018’ திரைப்படம் தேர்வாகாமல் வெளியேறியுள்ளது.
இதையும் படியுங்கள் : 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 2023 - விருது பட்டியல்
இந்தாண்டு ராஜமெளலியின் 'RRR' திரைப்படமும், ஆவணப்படமான ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படமும் ஆஸ்கர் விருது பெற்று இந்திய சினிமா பக்கம் உலக ரசிகர்களின் பார்வையை திருப்பியது. இந்நிலையில், ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்கு ‘2018’ தேர்வாகாதது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.