Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு - மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை

2006 மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்த் உத்தரவிட்ட மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது
01:04 PM Jul 24, 2025 IST | Web Editor
2006 மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்த் உத்தரவிட்ட மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது
Advertisement

ஜூலை 11, 2006 அன்று, மும்பையின்  ரயில்களில் தொடர் குண்டு வெடிப்பு  ஏற்ப்பட்டது. இதில் 189 பேர்  உயிரிழந்தனர். மேலும்  820 பயணிகள் காயமடைந்தனர். அலுவலக நேரம் முடிந்து மக்கள் வீடு திரும்பும் மாலை நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தபட்டதால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கிய இந்த சங்கிலித்தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், , 2015ல் குற்றவாளிகளில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.  இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், கடந்த   ஜூலை 21 அன்று நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷ்யாம் சண்டக் அடங்கிய அமர்வு, குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு எதிரான குற்றங்களை நிரூபிக்க அரசு தரப்பு முழுமையாக தவறிவிட்டது. ஆகவே, அவர்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கிறோம் என்று தீர்ப்பபளித்தது.

இந்த நிலையில் மும்பை  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்ட்ரா அரசு, கடந்த ஜூலை 22அம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த   இவ்வழக்கை  நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான  அமர்வு விசாரித்தது.  விசாரணையின் போது, மகாராஷ்டிரா அரசு சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தின், தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் வாதங்களைக் கேட்ட பிறகு, உச்ச நீதிமன்றம்  ”மும்பை உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு  இடைக்காலத் தடை விதித்து,"  உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Tags :
maharasahtragovermentmumbaihighcourtlatestnewsmumbaitrainbompblastSupremeCourtTNnews
Advertisement
Next Article