For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“20 வருட பயணம்... எல்லாம் மாறிவிட்டது” - சுந்தர் பிச்சையின் இன்ஸ்டா பதிவு!

10:31 AM Apr 27, 2024 IST | Web Editor
“20 வருட பயணம்    எல்லாம் மாறிவிட்டது”   சுந்தர் பிச்சையின் இன்ஸ்டா பதிவு
Advertisement

கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை.

Advertisement

கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் கூகுள்.  எதைப் பற்றியாவது நாம் அறிய வேண்டுமானால் நம் கைகள் உடனே செல்வது கூகுளுக்கு.  அப்படிப்பட்ட கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை.  தமிழர்களின் ஆற்றலை உலகம் அறியச் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர்.  தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் கடந்த 2004 -ம் ஆண்டு Google நிறுவனத்தில் இணைந்தார்.  ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவில் கூகுளின் தேடல் பகுதியில் வேலை பார்த்த சுந்தர் பிச்சை தற்போது அதன் சிஇஓவாக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

ஏப்ரல் 26, 2004 கூகுளில் எனது முதல் நாள்.  அதன் பிறகு நிறைய மாறிவிட்டது.  தொழில்நுட்பம்,  எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ... என் முடி. என்ன மாறவில்லை.  இந்த அற்புதமான நிறுவனத்தில் பணிபுரிவதில் நான் பெறும் மகிழ்ச்சியடைகிறேன்.  20 ஆண்டுகள் ஆகியும், நான் இன்னும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement