Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"20 லட்சம் EVM இயந்திரங்களை காணவில்லை; பத்திரிகையாளர் பகிரங்க குற்றச்சாட்டு" - வைரலாகும் வீடியோவின் உண்மை என்ன?

12:29 PM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

This news fact checked by The Qiunt

Advertisement

மொத்தம் 60 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காணவில்லை என பத்திரிகையாளர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு தி குயிண்ட் செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது. இது குறித்து விரிவாக காணலாம்

2024 மக்களவைத் தேர்தல் - 3வது முறையாக மோடி ஆட்சி

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.


மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால்  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது.

”20 லட்சம் EVM இயந்திரங்களை காணவில்லை”

நவ தெலங்கானா “ எனப்படும் தெலுங்கு நாளிதழின் தலைமை ஆசிரியரான எஸ் வீரய்யா  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள முரண்பாடுகள் பற்றிய வீடியோ ஒன்று பகிரப்பட்டு அது சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் தொடர்புடையதாக பரவியது.  இந்த வீடியோவில் தெலுங்கில் பேசிய வீரய்யா " நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தலுக்காக 60 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டன.  இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.  பணமும் கொடுக்கப்பட்டது.

ஆனால் இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விஷயம் என்னவெனில் 20 லட்சம் இவிஎம் இயந்திரங்களை காணவில்லை. 20 லட்சம் இயந்திரங்கள் எங்கே? இதுதான் என்னுடைய கேள்வி. 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காணாமல் போனது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கேட்டபோது, ​​எங்களுக்கு 40 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே தெரியும் என்றும், மற்ற 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எங்குள்ளது என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்கள்

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்டிராங்ரூம்களில் பாதுகாப்பாக வைத்திருக்கும் போது, ​​யாரேனும் ஒருவர் இரவோடு இரவாக மாற்றியிருக்க வாய்ப்பு உண்டு என்கிற சந்தேகம் அனைவருக்கும் வரலாம். வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக அவர்கள் விரும்பிய வாக்குகள் உள்ள இயந்திரங்களை அவர்கள் கொண்டு வந்திருந்தால்?  இப்படி சந்தேகம் எழுவதில் தவறில்லை.  20லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து மோடியோ அல்லது வேறு எந்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரியோ பதில் சொல்லவில்லை. இது எவ்வளவு முக்கியமான விஷயம்?” என

உண்மை சரிபார்ப்பு

முதலில் வீரய்யா பேசும் வீடியோவின் பாகத்தின் க்ராப் செய்து அதன் கீ ஃபிரேம்களை பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தினோம்.  தேடலின் முடிவில் அதே வீடியோவை எஸ் வீரையா அனாலிசிஸ் யூடியூப் சேன்லில் கிடைத்தது . 12 ஜூலை 2019 அன்று இந்த வீடியோ  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் காணாமல் போன 20 லட்சம் EVMகள் எங்கே? S Veeraiah Analysis"  என்ற தலைப்புடன் அது பதிவேற்றப்பட்டது.

வைரல் வீடியோவில் 0:55 முதல் 2:50 நிமிடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். தேர்தலுக்காக 60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டதாகவும், 40 லட்சம் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் செய்தியாளர் தெரிவித்தார். மீதி 20 லட்சம் இயந்திரங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் இது தற்போதைய 2024 தேர்தலோடு தொடர்புடைதல்ல பழைய வீடியோ என்பது ஆதாரப்பூர்வமான தகவல்களின்படி நிரூபிக்கப்படுகிறது

முடிவு:

மொத்தம் 60 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காணவில்லை என பத்திரிகையாளர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது பழைய வீடியோ தற்போதைய நாடாளுமன்ற தேர்தலோடு தொடர்புடையது அல்ல என ஆதாரப்பூர்வ தகவலகளின்படி நிரூபிக்கப்படுகிறது.

Note : This story was originally published by The Qiunt and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
EVMFACT CheckingFalsefalse claimnda
Advertisement
Next Article