'100 கிலோ வெண்ணெய்யில் உருவாக்கப்பட்ட 20 அடி அனுமன் சிலை' - உலக சாதனை படைத்த பொறியியல் வல்லுநர்!
சென்னை தியாகராய நகரில் பொறியியல் வல்லுநர் கௌதம் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கிய 20 அடி உயர அனுமன் சிலை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த மாதம் 26ம் தேதி பக்த பத்ராசல சாமர் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு பாத சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில் பொறியியல் வல்லுநர் கௌதம் என்பவர் கலந்து கொண்டார். இவர் சுவாமி அலங்காரம் செய்யும் கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இந்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கௌதம், வெண்ணெய்யைக் கொண்டு 20 அடி உயர அனுமார் சிலையை உருவாக்கினார். இவர் இந்த அனுமன் சிலையை தனிநபராக உருவாக்க 24 மணி நேரம் ஆனது. மேலும் இவர் இந்த சிலையை உருவாக்க 100 கிலோ வெண்ணெய் பயன்படுத்தினார். இந்த சூழலில் இவர் வெண்ணெய் மூலம் உருவாக்கிய 20 அடி உயர அனுமன் சிலை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.