Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

04:12 PM Nov 08, 2023 IST | Jeni
Advertisement

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகை 11.67% வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பாபரின் இரண்டரை வருட ஆதிக்கத்தை உடைத்த கில்..! - பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49,023 பணியாளர்களுக்கு ரூ.29 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags :
BonusCMOTamilNaduDiwaliMKStalinTNGovt
Advertisement
Next Article