Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

''விக்ரம்'' படம் வெளியாகி 2 ஆண்டிகள் நிறைவு... சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

09:18 AM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜுன் 3) 2 ஆண்டுகளை நிறைவடைந்தது.

Advertisement

கமல்ஹாசன் இந்திய சினிமாவின் பிதாமகன் என போற்றப்படுபவர். அவரது ஒவ்வொரு படங்களும் ஏதாவது ஒரு புதுமையான அனுபவத்தை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கொடுக்கும். அப்படி கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுவதும் சினிமாவுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர், கமல்ஹாசன். ஆனாலும், அவரது படங்கள் சமீப காலமாக எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வணிக ரீதியான வெற்றியையும் பெற தவறின. இந்த நிலையில் தான், கடந்த ஆண்டு 2022இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘விக்ரம்’ என்ற படத்தில் நடித்தார்.

இப்படம் வெளியாகி இதுவரை இல்லாத அளவில் கமலுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. லோகேஷ் கனகராஜ் எந்தவித சினிமா அனுபவமும் இல்லாமல் முதன் முதலாக மாநகரம் என்ற படத்தை இயக்கினார். அப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றதுடன், லோகேஷ் கனகராஜ் யார் என்று தமிழ் திரையுலகினரை தேட வைத்தது.

அதனைத் தொடர்ந்து, முன்னணி நடிகரான கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இப்படம் இதுவரை இருந்த சினிமா மொழியை மாற்றி அமைத்ததுடன் வெற்றியும் பெற்றது. இதன் மூலம் முன்னணி இயக்குநராக உருவெடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கினார். அதுவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது.

அதன்பிறகுதான் இந்த கூட்டணி இணைந்தது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப் பெரிய நடிகர்களின் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கினார். அதுமட்டுமின்றி நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்குகளை தெறிக்க விட்டார். ரோலக்ஸ் என்ற அந்த கதாபாத்திரம் திரையரங்குகளை தீப்பிடிக்க வைத்தது.

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்து வந்த யுனிவர்ஸ் என்ற வகையை தமிழில் இப்படத்தின் மூலம் கொண்டு வந்தார் லோகேஷ். ஏற்கனவே சில படங்களில் வந்திருந்தாலும், இதில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி இதே நாளில் வெளியான விக்ரம் திரைப்படம் கிட்டத்தட்ட 100 நாட்கள் வெற்றிகரமாக திரையில் ஓடியது.

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களுக்கு பிறகு 100 நாள் கண்ட படமாக இது மாறியது. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 430 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இன்றுடன் 2 வருங்களை நிறைவு செய்துள்ள விக்ரம் திரைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags :
2 years of vikramKamal haasanOnce a King Always a KingulaganayaganvikramVikram All Time Record
Advertisement
Next Article