உலகக்கோப்பையில் இன்று 2 ஆட்டங்கள் - வெற்றி யாருக்கு..?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.
அந்த வகையில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், அடுத்து வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறக்கூடும். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது. அதேநேரம் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தும் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் பொருட்டு, இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டும்.
இதையும் படியுங்கள் : காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற கைதி - துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த இன்ஸ்பெக்டர்..!
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, அரையிறுதிக்கான ரேஸில் இருப்பதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும். அதேநேரம், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிட்ட இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணிக்கு நெருக்கடி கொடுக்கம் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.