மதுரை - திருவனந்தபுரம் ரயிலில் 2 கூடுதல் பொதுப் பெட்டிகள் இணைப்பு!
பயணச்சீட்டு முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை - திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயணச்சீட்டு முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை - திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
இந்த புதிய வசதி திருவனந்தபுரம் - மதுரை ரயிலில் (16343) ஜூன் 05 முதலும், மதுரை - திருவனந்தபுரம் ரயிலில் (16344) ஜூன் 06 முதலும் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி குறைக்கப்படுகிறது.
இதையடுத்து இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டியுடன் கூடிய குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு தனி குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்” என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.