Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கிக்கணக்கில் ரூ.2.50 கோடி! தலைமறைவான இளைஞர்! போலீசார் தீவிர விசாரணை!

11:47 AM Aug 14, 2024 IST | Web Editor
Advertisement

பண்ருட்டியை அடுத்த பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.2.50 கோடி திடீரென வரவுவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார் (25). இவர் மீது முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் நிலையத்தில் இவரது பெயர் ரௌடிகள் பட்டியலில் உள்ளது.

முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள தேசிய வங்கியில் அசோக்குமார் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கிக் கணக்கில் கடந்த ஜூலை மாதம் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.2.50 கோடி செலுத்தப்பட்டதாம். இது தொடர்பாக, வங்கி அதிகாரிகள் அசோக்குமாரிடம் கேட்டதற்கு, பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் பணம் வந்ததாக கூறினாராம். அதிகாரிகள் வங்கி பரிவர்த்தனைகளை ஆராய்ந்த போது, பங்குச் சந்தையில் இருந்து பணம் வரவில்லை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்துக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அசோக்குமார் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 கோடியை மட்டும் இணையவழியில் நண்பர்கள் 7 பேரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாராம். அவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
bank accountCuddalorePoliceYoungster
Advertisement
Next Article