#Chennaiairportsmuggling | 2.2 கிலோ தங்கம் கடத்தல் | ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது!
சென்னை விமான நிலையத்தில் சோதனையில் இல்லாமல் தங்கத்தை வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக துபாய், சார்ஜா, குவைத், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கங்கள் பெருமளவு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சுங்கச் சோதனைகள் இல்லாமல் கடத்திச் செல்லப்பட்டன.
இந்த இரண்டு மாதங்களில் ரூ. 167 கோடி மதிப்புடைய 267 கிலோ கடத்தப்பட்ட அனைத்து தங்கங்களும் ஒட்டு மொத்தமாக சுங்கச் சோதனை இல்லாமல் கடத்தல் ஆசாமிகள் வெளியில் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவங்கள் குறிப்பாக டிரான்சிட் பயணிகள் மூலமாகவே நடந்துள்ளன.
இந்த நிலையில், துபாயில் இருந்து கடத்தி வந்து சுங்கச் சோதனையில் இல்லாமல் தங்கத்தை வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ₹1.5 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீபக் உள்ளிட்ட இரு ஒப்பந்த ஊழியர்களையும், சென்னை தியாகராய நகரில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.ரூ.1.5 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கடத்தல் தங்கத்தை எடுத்துச்செல்ல முயன்ற சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.