மாலத்தீவில் இருந்து 43 இந்தியர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்!
இந்தியாவைச் சேர்ந்த 43 பேர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 186 பேர் மாலத்தீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டடுள்ளனர்.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுசெய்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது.
நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டார். மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரண்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் விசா விதிமீறல், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 43 பேர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 186 பேர் மாலத்தீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் அதிகபட்சமாக வங்கதேசத்தைச் சேர்ந்த 83 பேர் உள்ளனர். இதனையடுத்து 43 இந்தியர்கள், இலங்கைச் சேர்ந்த 25 பேர், நேபாளத்தைச் சேர்ந்த 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளாத கூறப்படுகிறது.