18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம்… குகேஷுக்கு பரிசுத்தொகை அறிவித்த முதலமைச்சர் #MKStalin!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழ்நாட்டு வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் இளம் உலக செஸ் சாம்பியன் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். மேலும் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற 2வது தமிழக வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
இதற்கு முன் ரஷ்யாவின் கேரி கேஸ்ப்ரோ 22 வயதில் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது 18 வயதே ஆன குகேஷ் உலக சாம்பியன் ஆகியுள்ளார். சாம்பியன் பட்டம் குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், குகேஷால் தமிழ்நாடே பெருமை கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழ்நாட்டு வீரர் குகேஷ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.