ரூ2000-க்கு கீழ் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% #GST? - மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்!
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்பு வரை டிஜிட்டல் பண பாிவா்த்தனையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் காா்டுகளை பயன்படுத்தும்போது எம்.டி.ஆா். தொகை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மக்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக இந்த வரி ரத்து செய்யப்பட்டது. தற்போது, யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, போன் பே, ஜி பே மூலம் செய்யும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய நட்சத்திர ஓட்டல் வரை எல்லா இடங்களும் டிஜிட்டல் மயாகிவிட்டன.
இரு தனிநபர்களுமே பணத்தை கையில் வாங்குவதற்கு பதில் டிஜிட்டலில் வாங்க தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை (செப்.9) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க பரிசீலனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.