For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024 | மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!...

06:45 AM May 06, 2024 IST | Web Editor
ஐபிஎல் 2024   மும்பை இந்தியன்ஸ்   சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
Advertisement

தொடரில் இன்று நடைபெறும் 55வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 

Advertisement

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது.

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ள காரணத்தால், இப்போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலிலாவது முன்னேற்றமடைய முயற்சிக்கும்.  அதேசமயம் ஹைதராபாத் அணி இப்போட்டியில் வெல்லும் பட்சத்தில் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் அந்த அணியும் வெற்றிபெற கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

முன்னதாக இவ்விரு அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனின் மோதிய லீக் போட்டியானது ஐபிஎல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதிலும் குறிப்பாக ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 277 ரன்களை குவித்து, ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய அணி எனும் வரலாற்று சாதனையை படைத்திருந்து குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement