சுரங்கத்திற்குள் 17 நாட்கள் தவித்த 41 தொழிலாளர்கள்... திக்... திக்... நிமிடங்கள்....
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக நடைபெற்ற நிலையில், வெற்றிகரமாக அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 17 நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் திக்...திக்...நிமிடங்களாக கடந்தன. மீட்பு பணி கடந்து வந்த பாதை என்ன... பார்க்கலாம்....
நவம்பர் 12, மாலை 5.30 மணி - சில்க்யாரா வளைவு - பார்கோட் சுரங்கப் பாதையில் திடீர் நிலச்சரிவு
நவம்பர் 12, இரவு 8.30 மணி - சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல்
நவம்பர் 12, நள்ளிரவு 11.30 மணி - தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவு
நவம்பர் 13, காலை 7 மணி - தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் அளிக்கும் பணி தொடக்கம்
நவம்பர் 13, காலை 11 மணி - சம்பவ இடத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி விரைவு
நவம்பர் 15, காலை 7 மணி - மீட்புப் பணிக்கு டெல்லியில் இருந்த அமெரிக்க கனரக இயந்திரம் வரவழைப்பு
நவம்பர் 16, காலை 5 மணி - அதிக செயல்திறன் கொண்ட துளையிடும் இயந்திரத்தை நிறுவும் பணி தொடக்கம்
நவம்பர் 17, காலை 9 மணி - இயந்திர கோளாறால் மீட்பு பணி இடைநிறுத்தம்
நவம்பர் 18, காலை 11 மணி - அமெரிக்க கனரக இயந்திரம் அதிர்வு காரணமாக தோண்டும் பணி நிறுத்தம்
நவம்பர் 21, காலை 8 மணி - சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியானது
நவம்பர் 22, அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்படுவர் என முதல்வர் புஷ்கர்சிங் தாமி நம்பிக்கை
நவம்பர் 28, 8 மணி - சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் ஒவ்வொருத்தராக வெற்றிகரமாக மீட்பு