Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்கவில் திரைப்படங்களை பார்க்க ரூ.1,66,540 தரும் நிறுவனம்!

11:29 AM Nov 17, 2023 IST | Web Editor
Advertisement

கிறிஸ்துமஸை முன்னிட்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று  12 திரைப்படங்களைப் பார்த்து அதனை வரிசைப்படுத்துவோருக்கு போட்டியை அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு $2,000, அதாவது இந்திய மதிப்பு படி ரூ. 1,66,540 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

Advertisement

அமெரிக்கவில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல வேடிக்கை விளையாட்டுகள் நடத்தப்படும்.  அந்த வகையில்,  கிறிஸ்மஸுக்கான கவுண்ட்டவுன் வேகமாக நெருங்கி வருவதால்,  ஒரு நிறுவனம் 12 ஹால்மார்க் விடுமுறை திரைப்படங்களைப் பார்த்து தரவரிசைப்படுத்துவோருக்கு  $2,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்:திருவண்ணாமலை தீபத் திருவிழா; சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!

மேலும், கிறிஸ்துமஸ் கெட்அவே (2017),  ராயல் கிறிஸ்துமஸ் ( 2014),  நார்த்போல் (2014) , கிறிஸ்துமஸ் ரயில் (2017) உள்ளிட்ட 12 திரைபடங்கள் இந்த போட்டிக்கு  தேர்ந்தெடுக்கபட்டுள்ளன.

திரைப்படங்களை  தரவரிசைப்படுத்த பல்வேறு முறைகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது இந்த நிறுவனம்.  அதிலும் குறிப்பாக விழாக் காரணி, முன்கணிப்பு அளவு, வேதியியல் சோதனை, கண்ணீரைத் தூண்டும் சோதனை மற்றும் மறுபதிப்பு மதிப்பு உள்ளிட்ட அளவுகோல்களின்படி  போட்டியாளர்கள் தரவரிசைப்படுத்த வேண்டும்.

அந்த வகையில், 12 ஹால்மார்க் கிறிஸ்துமஸ் திரைப்படங்களைப் பார்த்து இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு அந்த அமெரிக்க நிறுவனம் சார்பில் $2,000 மற்றும் பல பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  இதனால், அமெரிக்காவில் சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Tags :
166540 priceAmericaChristmasChristmasspecialGamesHallmark Christmas moviesUSA
Advertisement
Next Article