Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

16 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! தென்சென்னையில் ஜெயவர்தன், கரூரில் தங்கவேல் போட்டி!

10:11 AM Mar 20, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் 16 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை,  அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Advertisement

ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.  தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய  தீவிரம் காட்டி வருகின்றன.

இதையும் படியுங்கள் : 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக - இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

அதிமுகவின் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் :

  1.  வடசென்னை - ராயபுரம் ஆர்.மனோ
  2.  தென்சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
  3.  காஞ்சிபுரம் - ராஜசேகர்
  4.  அரக்கோணம் - ஏ.என்.விஜயன்
  5.  கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
  6.  ஆரணி - கஜேந்திரன்
  7.  விழுப்புரம் - பாக்யராஜ்
  8.  சேலம் - விக்னேஷ்
  9.  நாமக்கல் - கவிமணி
  10.  ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
  11.  கரூர் - தங்கவேல்
  12.  சிதம்பரம் - சந்திரகாசன்
  13.  நாகப்பட்டினம் - சுர்ஜித் சங்கர்
  14.  தேனி - வீ.டி.நாராயணசாமி
  15.  மதுரை - டாக்டர் சரவணன்
  16.  ராமநாதபுரம் - பா.ஜெயபெருமாள்

மேலும் தேமுதிகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.   எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும்,  புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும்  ஒதுக்கப்பட்டதாகவும் அவர் அறிவித்தார்.

Tags :
ADMKAIADMKEdappadi palanisamyElection2024Puthiya Thamilagamsdpi
Advertisement
Next Article