பார்படாஸிலிருந்து 16 மணி நேர பயணம் - இந்திய அணி வீரர்களும் விமானத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களும்...
பார்படாஸிலிருந்து டெல்லிக்கு 16 மணி நேர விமான பயணத்தில் இந்திய அணி வீரர்கள் செய்த சேட்டைகள், நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை விரிவாக காணலாம்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது.
புயல் கரையை கடந்ததை தொடர்ந்து இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். இந்த விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இந்த நிலையில், அதிகாலை முதலே விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிட்டத்தட்ட 16 மணி நேரம் இந்திய அணி வீரர்கள் விமானத்தில் பயணித்து வந்துள்ளனர். இப்பயணத்தில் ஒட்டுமொத்த அணியும் ஆட்டம் பாட்டம் விளையாட்டு நகைச்சுவை என சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்டனர். அதுபற்றி விரிவாக காணலாம்.
- இந்திய அணி வீரர்கள் இருந்த தனி விமானத்தில் விமானத்தின் கேப்டன் இந்திய அணியின் வெற்றிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் சிறப்பு அறிவிப்பி வெளியிட்டார்.
- இதனைத் தொடர்ந்து நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு பாராட்டுக்களும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இனிமேல் ராகுல் டிராவிட் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வரமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
- இந்திய அணியின் வீரர்கள் சிலர் குடும்பத்தினருடன் பிசினஸ் கிளாஸில் இருந்தனர். ஆனாலும் சூர்யகுமார் யாதவ், சாஹல், ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சக வீரர்களுடன் நேரத்தை செலவிடவும் ஒருவருக்கொருவர் கேலி செய்து விளையாடவும் எகனாமிக் கிளாஸில்தான் பலமணி நேரம் செலவிட்டனர்.
- ஆட்டநாயகன் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தனது மகன் அங்காத் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்.
- இந்திய வீரர்கள் விமானத்தில் இருந்தபடியே தனித்தனியாக டி20 உலகக் கோப்பையுடன் படம் எடுத்துக் கொண்டனர்
- ரோகித் ஷர்மா, ஷாஹல் உள்ளிட்ட வீரர்கள் சிறு குழந்தைகளை போல விமானத்தில் விளையாடி மகிழ்ந்தனர்
இந்த நிலையில் தாயகம் திரும்பியுள்ள இந்திய வீரர்கள் இன்று காலை 11மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு, மும்பை திரும்பும் இந்திய வீரர்கள் கோப்பையுடன் நாரிமன் பாய்ன்ட் பகுதியிலிருந்து மெரைன் டிரைவ் வரை, மேற்கூரை திறந்த பேருந்தில் ஊர்வலமாகச் செல்கின்றனர். பின்னர், மாலை சுமார் 5 மணியளவில் வான்கடே மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.