For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம்! 1563 பேருக்கு நாளை மறுதேர்வு!

04:31 PM Jun 22, 2024 IST | Web Editor
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம்  1563 பேருக்கு நாளை மறுதேர்வு
Advertisement

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு நாளை மறுதேர்வு நடைபெறுகிறது.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது.  அந்த வகையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.  இதனையடுத்து வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  இதுவரை நடைபெறாத வகையில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது சர்ச்சையைக் கிளப்பியது.  இதையடுத்து, தேர்வெழுதிய லட்சக்கணக்கானோரில் 1563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள் : 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வருமான வரி விலக்கு! எங்கு தெரியுமா?

என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில  மாற்றங்களாலும்,  சில தோ்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று என்டிஏ விளக்கம் அளித்தது.  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக அறிவித்தது.  இந்நிலையில்,  நாடு முழுவதும்  கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டு,  அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதையடுத்து,  நாளை நடைபெறும் நீட் மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி தோ்வில் அவா்கள் பெற்ற மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாக எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement