ஆந்திர கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் - ரூ.4லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சென்னை வியாபாரி!
ஆந்திராவில் கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீனை சென்னை வியாபாரி ஒருவரிடம் ரூ. 4 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிபட்டினம் கடற்கரையில் இருந்து
கடலுக்குள் வழக்கம்போல் மீன் பிடிக்க மீனவர் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில், மீனவர் வீசிய வலையில் அதிக எடையுள்ள ஏதோ ஒன்று சிக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து வலையை கரைக்கு இழுத்து வந்த அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒன்னரை டன் எடை கொண்ட தேக்கு மீன் சிக்கி உள்ளது தெரிய வந்தது.
இதையும் படியுங்கள் :தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா : திவ்ய நற்கருணை பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!
இதனையடுத்து, அந்த தேக்கு மீனை கரைக்கு எடுத்து வர மீனவர்கள் சிரமப்பட்டனர். பின்னர், கிரேன் உதவியுடன் அந்த மீனை கரைக்கு இழுத்து வந்தனர். தொடர்ந்து, அந்த தேக்கு மீனை ஏலத்தில் விடும் பணியில் அந்த மீனவர் ஈடுபட்டார். இது பற்றிய தகவல் அறிந்த சென்னையை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் அந்த மீனவரிடம் சென்று நான்கு லட்ச ரூபாய் கொடுத்து அந்த மீனை வாங்கிச் சென்றதாக தெரியவந்துள்ளது. பொதுவாக தேக்கு மீன் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.