For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கு - குற்றவாளிகள் 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

09:28 PM Nov 24, 2024 IST | Web Editor
சென்னையில் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கு   குற்றவாளிகள் 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
Advertisement

சென்னை அமைந்தகரையில் 14 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு, அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

Advertisement

சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நிஷார்க். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், தனது வீட்டில் வேலை செய்யும் சிறுமி இறந்துவிட்டதாக தீபாவளியன்று தனது வழக்கறிஞர் மூலம் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து, நவாஸின் வீட்டுக்கு சென்று அவரது குளியலறையில் இருந்து சிறுமியின் உடலை காவல்துறையினர் மீட்டனர். சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்களும், சிகரெட் சூடு வைத்த காயங்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நிஷாத்திடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஓராண்டுக்கு முன்பு அழைத்து வரப்பட்ட சிறுமியை நிஷாத், அவரது மனைவி நாசியா இருவரும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. தீபாவளி அன்றும் அதுபோல் தாக்கியதில் சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்ததும், அவரது உடலை குளியறையில் போட்டுவிட்டு அவர்கள் நண்பரின் வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து முகமது நிசாஹ், அவரது மனைவி நாசியா, நண்பர் லோகேஷ் உள்ளிட்ட 6 பேரை கடந்த 2 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால், எங்களுக்குள் தினமும் தகராறு ஏற்படும். சிறுமியின் மீதும் எனது கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டேன். இதனால் சிறுமியை தொடர்ந்து சித்ரவதை செய்ய தொடங்கினேன் என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார் நாசியா.

சிறுமி மீது என் கணவருக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக, குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என பொய்சொல்லி ஆத்திரமூட்டினேன். தீபாவளியன்று, லோகேஷ், ஜெயசக்தி, என் கணவரின் சகோதரி சீமா பேகம் ஆகியோர் வீட்டுக்கு வந்திருந்தனர். அப்போது சிறுமியை அடித்தோம். அதில் மயங்கி விழுந்ததில் அவர் இறந்துவிட்டார் என நாசியா அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 6 பேரின் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாத், அவரது மனைவி நாசியா உள்பட 6 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

Tags :
Advertisement