இந்திய மிளகாயில் தயாரிக்கப்பட்ட சிப்ஸை சாப்பிட்ட 14 ஜப்பானிய மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 பேர் "அதிக காரமான" உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோவின் ஓட்டா வார்டில் உள்ள ஒரு பள்ளியில் ஏராளமான மாணவர்கள், மிகவும் காரமான உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிட்ட பிறகு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் புகார் தெரிவித்தனர். மேலும் 14 மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்கள் வாய் மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
இந்த சர்ச்சையை ஏற்படுத்திய Isoyama Corp இன் "R 18+ Curry Chips." அதன் இணையதளத்தில்,``18+'' மற்றும் ``பெரியவர்களுக்கு மட்டும்'' போன்றவ குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல. பலவீனமான வயிறு, அல்லது 18 வயதுக்குட்பட்டவர்கள் அதற்குக் குறைவாகச் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிப்ஸை புட் ஜோலோகியா என்ற மிளகாய்கய் பொடி கொண்டு தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. புட் ஜோலோகியா உலகின் காரமான மிளகாய்களில் ஒன்றாகும். இது வடகிழக்கு இந்தியாவில், குறிப்பாக அஸ்ஸாம், நாகாலாந்து மற்றும் மணிப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகிறது. இது 2007 முதல் 2011 வரை உலகின் மிக காரமான மிளகாய்க்கான கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தது.