பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பல்லி இறந்து கிடந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் பகுதியை அடுத்து சமத்துவபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள
மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது இப்பள்ளியில் 45 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதையும் படியுங்கள் ; தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 11.4% அதிகரிப்பு!
பள்ளியில் மாணவர்களுக்கு தினந்தோறும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட காலை சிற்றுண்டி வழங்கும் உணவுத்திட்டத்தின் அடிபடையில் உணவு வழங்கப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. மேலும், இந்த உணவை சாப்பிட்ட 13 மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல குறைவு ஏற்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை அறிந்த ஆசிரியர்கள் மாணவர்களை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதல் உதவி சிகிச்சை நடைபெற்றது.
பின்னர், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு நடத்தினர். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி சமைத்தவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினர். பள்ளி சிற்றுண்டியில் பல்லி இருந்ததை பற்றி விசாரணை நடைபெற்ற வருகிறது.