சீனாவில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!
சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் தொடர் மழையினால் மஞ்சள் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர். இதனை தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஓர்டோசில் உள்ள ஆற்றிலும் 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மீட்பு பணியின் போது 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். மேலும் பலர் வெள்ளத்தில் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.