Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட 121 விவசாயிகள்!

மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, விவசாயிகள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
06:58 PM Jan 19, 2025 IST | Web Editor
Advertisement

வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் (வயது 70) கடந்த நவம்பர் 26ம் தேதி கனவுரி எல்லை அருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக கூறிய அவர், மருத்துவ சிகிச்சையையும் ஏற்க மறுத்தார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

Advertisement

அவருக்கு ஆதரவாக கடந்த புதன்கிழமை 111 விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் மேலும் 10 விவசாயிகள் உண்ணாவிரதத்தில் இணைந்தனர். இதற்கிடையே, மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான குழுவினர் விவசாய சங்க பிரதிநிதிகளையும், உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலையும் நேற்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, பிப்ரவரி 14ம் தேதி சண்டிகரில் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற சம்மதித்தார். அதன்பின்னர் தல்லேவாலுக்கு நரம்பு வழியாக மருந்து செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 121 விவசாயிகளும் இன்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

121 விவசாயிகளும் பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். இருப்பினும், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் வரை தல்லேவால் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிட மாட்டார் என்று விவசாயத் தலைவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Advertisement
Next Article