Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீனாவில் பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சீனாவில் கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
08:04 AM Aug 24, 2025 IST | Web Editor
சீனாவில் கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் உள்ள மஞ்சள் ஆற்றின் மீது மிகப்பெரிய ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலம் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது
திடீரெ பாலம் இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மீது இருந்த 16 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அதன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சள் ஆற்றில் இருந்து 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் மேலும் 4 பேர் ஆற்றில் விழுந்து மாயமாகி உள்ளனர். இதனால் ஹெலிகாப்டர், படகு மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Bridge collapsechinaChinabridgekilledWorkers
Advertisement
Next Article