மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை -பாதுகாப்புப் படையினர் அதிரடி!
மகாராஷ்டிரா சத்தீஸ்கர் எல்லையோரத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில் போலீசாருடன் இணைந்து கமோண்டோ படை வீரர்கள், நக்சலைட்டைடுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.மேலும், இந்த சண்டையில் 12 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர். இதையடுத்து, 12 நக்சலைட்டுகளின் உடல்களை காவல்துறையினர் மீட்டனர்.
இதையும் படியுங்கள் : தொடர் மழை | நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதற்கிடையே, ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் கமோண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் துதேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.