நாகை மீனவர்கள் 12 பேர் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க ஏராளமான படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இவர்கள் மீது இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மீனவ குடும்பங்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்கள் பிரச்சினை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இதற்கு அரசியல் ரீதியாக முடிவு எட்டப்படும் வரை ஒருமித்த தீர்வு என்பது சாத்தியமில்லை என்றும், மீனவர்களின் கண்ணீரை துடைப்பது சிரமம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.