11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு!
தமிழ்நாட்டில் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. மொத்தம் 8,07,098 மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர்.
இன்று காலை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்நிலையில் இந்த முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த பொதுத்தேர்வில் 92.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4, 03,949 மாணவியர்கள் (95.13 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,39,283 (88.70 %) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட 6.43% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். முடிவுகளை www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.