11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!
பதினோராம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வழக்கில் கைதான உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிரியரின் செல்போனில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எங்கே நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், இடலாக்குடி வட்டவிளை காமராஜ் தெருவை சேர்ந்தவர் சுந்தர்சிங். இவர் மயிலாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர், மேலும் பள்ளி செல்ல வசதியாக கன்னியாகுமரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
ஆசிரியர் உதவி செய்வதாக நினைத்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
மேலும் மாணவிக்கு பல்வேறு உதவிகள் செய்ததோடு மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி அவரது காரில் பல்வேறு இடங்களுக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாணவியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். இந்த நிலையில் நடந்ததை எல்லாம் மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் சிங்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது பல பெண்களுடன் சுந்தர் சிங் இருக்கும் 100க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்களும் 70க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் இருந்தது தெரிய வந்தது. அவரின் செல்போனில் இருக்கும் பெண்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு பல பெண்களின் வாழ்க்கையை சீரலிக்கும் நோக்கில் பழகி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக பதிவு செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.