Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேர் விடுதலை - #Srilanka நீதிமன்றம் உத்தரவு!

01:52 PM Sep 06, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கை கடற்படையினரால் கடந்த ஆக.23ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11 நாகை மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், நம்பியார் நகரைச் சேர்ந்த சிவராஜ், வர்ஷன், சுமன், மற்றும் புதிய கல்லார் ராஜேந்திரன் ஆகிய மீனவர்கள் கடந்த 23ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று, மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 11 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து சிறையில் அடைத்தது. இன்றோடு அவர்களின் சிறைக்காவல் முடிவடைந்த நிலையில் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணை நடத்திய நீதிபதி, 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள், இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
fishersReleaseSrilankaTamilNadu
Advertisement
Next Article