For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சீர்காழியில் ஒரே நேரத்தில் காட்சியளித்த 11 பெருமாள்கள்... தங்க கருடசேவை உற்சவம் கோலாகலம்!

சீர்காழி அடுத்த திருநாங்கூர் நாராயண பெருமாள் கோயிலில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
08:43 AM Jan 31, 2025 IST | Web Editor
சீர்காழியில் ஒரே நேரத்தில் காட்சியளித்த 11 பெருமாள்கள்     தங்க கருடசேவை உற்சவம் கோலாகலம்
Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் மற்றும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளில் 11 தி வ்ய தேச கோயில்கள் அமைந்துள்ளன.
திருநாங்கூரில் ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் பிரசித்தி பெற்ற 11 தங்க கருடசேவை உற்சவம் நடைபெருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான கருட சேவை உற்சவம் நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

கருட சேவையை முன்னிட்டு திருநகரி ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை ஏற்று 11 கோயில்களில் இருந்து பெருமாள்களும் புறப்பட்டு
நாங்கூர் மணிமாடக்கோயிலில் மாலை எழுந்தருளினர்.

அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது. இரவு 12 மணியளவில் மணிமாடக்கோயில் ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுத வள்ளி நாச்சியாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர்.

தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்னர். மேலும், அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Advertisement