Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காலாவதியான உரிமத்துடன் தாறுமாறாக கார் ஓட்டிய 103 வயது மூதாட்டி!

10:17 AM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement

காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் இரவு நேரத்தில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்ற 103 வயது மூதாட்டிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். 

Advertisement

இத்தாலியின்,  ஒரு வாகனம் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக அதிகாலை 1 மணியளவில் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.  வடக்கு எமிலியா ரோமக்னா பகுதியில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான முறையில் இயக்கப்படு ஓட்டுநரை மடக்கி பிடித்ததில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  காரணம் ஓட்டுநருக்கு 103 வயது.

கியூசெப்பினா மொலினாரி என்ற அந்த மூதாட்டி,  நண்பர்களைச் சந்திப்பதற்காக போண்டெனோவுக்குச் சென்றதாகவும்,  இருட்டில் வழி தவறி ஒருவழிப்பாதையில் சென்றதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

காலாவதியான ஓட்டுநர் உரிமம்:

80 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.  ஆனால்,மோலினாரியின் ஓட்டுநர் உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியாகியிருந்தது. போலீசார் மொலினாரிக்கு அபராதம் விதித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

Tags :
103 year olddangerouslydrivesexpired licensewoman
Advertisement
Next Article